யாழ் நெல்லியடி மருந்தகத்தில் திருடிய நபர் கைது….! சிக்கியது எப்படி??
நெல்லியடி மருந்தகத்தில் திருடியவர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று நெல்லியடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த திருடன் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் கரவெட்டி கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த மருந்தகத்தில் அடிக்கடி கண்ணுக்கு மருந்து வாங்குவதற்காக கைதான நபர் அடிக்கடி வருவதாக தெரியவந்துள்ளது.
இவர் திருடும் போது சிசிரி கமராவில் அவரின் முகம் தெளிவாக தெரிந்துள்ளது.
ஆதனை அடிப்படையாக வைத்து குறித்த நபரை அடையாளப்படுத்தி அவரின் வீட்டில் பார்வையிட்ட போது குறித்த நபர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் பொழுது அணிந்திருந்த உடை வெயிலில் காய்ந்து கொண்டிருந்தது.
வீட்டில் சோதனையிட்ட போது மருந்தகத்தில் களவாடப்பட்டிருந்த மருந்துகள் மற்றும் ஒரு தொகை பணமும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து நெல்லியடி பொலீஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து நெல்லியடி பொலீஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதுடன் பருத்தித்துறை நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளனர்.
.
ஏ

