புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் துாக்கில் தொங்கிய 32 வயது குடும்பப் பெண் நவநீதமலர் !!!

வவுனியா – ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கை பகுதியிலிருந்து குடும்ப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் கணவர் வேலை நிமித்தம் புதுக்குடியிருப்புக்கு சென்றிருந்த நிலையில் நேற்று வீடு திரும்பியுள்ளார்.

இதன்போதே அவரது மனைவி வீட்டிற்கு முன்பாகவுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

10 மற்றும் 6 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான 32 வயதுடைய சதீஸ்குமார் நவநீதமலர் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து தடவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.