முக்காடு இல்லாமல் திரிவது தங்களுக்கு நிர்வாணமாக இருக்குதாம்… முஸ்லீம் பெண்கள் குமுறுகிறார்கள்.
முகத்தை மூடி அணியும் ஆடையை தடை செய்து வர்த்தமானி அறிவித்தல்
வெளியிடப்பட்டிருந்தாலும் உடனடியாக புர்கா, நிகாப் அணிவதை தவிர்க்க முடியாமல்
இருப்பதாக முஸ்லிம் பெண்கள் கூறியுள்ளனர்.
இதனை இஸ்லாமிய மத விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்துள்ளதாக
சுட்டிக்காட்டி *சிங்கள ஊடகமொன்று நேற்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
பல காலமாக முகத்தை மூடிவாறு வீதிகளில் சென்ற தமக்கு முகத்தை மூடாமல் செல்லும் போது
அசௌகரியமாக இருப்பதாக அந்த பெண்கள் கூறுவதாக மலிக் குறிப்பிட்டுள்ளார்.
பல வருடங்களாக முகத்தை மூடிக்கொண்டு சென்ற தமக்கு திடீரென முகத்தை மூடாமல் செய்வது
நிர்வாணமாக வீதியில் செல்வது போன்று இருப்பதாக சில பெண்கள் தெரிவித்துள்ளனர் எனவும்
மலிக் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், புர்கா, நிகாப் அணியாமல் செல்ல பழகுவதற்கு சில காலம் செல்லும் எனவும் அதனை
தவறாக கருத கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் முகத்தை மூடுவதை தடை செய்து அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி
அறிவித்தலுக்கு அமைய செயற்படுமாறு அனைத்து முஸ்லிம் பெண்களிடம் கோரிக்கை
விடுப்பதாகவும் அரசாங்கம் அமுல்படுத்தும் எந்த சட்டத்தை கடைபிடிக்க முஸ்லிம் சமூகம்
கடமைப்பட்டுள்ளதாகவும் மலிக் மேலும் தெரிவித்துள்ளார்.