கொவிட் திரிபு: ‘டெல்டா’வை விட ஆபத்து மிக்க ‘லெம்டா’ வைரஸ் கண்டுபிப்பு!

இந்தியாவில் திரிபு பெற்று உலகின் பல நாடுகளில் பேரவலத்தை ஏறபடுத்தி வரும் ‘டெல்டா’ வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள முடியாது உலக நாடுகள் திணறி வருகையில் தற்போது அதனையும் விட அதிக ஆபத்தை ஏற்படுத்தும் புதியவகை வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்ப்பட்டுள்ளது.

தற்போது உலகின் பல நாடுகளில் வேகமாக பரவி வரும் டெல்டா திரிபை விட பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புதிய கொவிட்-19 வைரஸ் திரிபு பெரு நாட்டில் அடையாளங் காணப்பட்டுள்ளது.

இந்த கொவிட்-19 திரிபுக்கு ‘லெம்டா’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை திரிபு பிரித்தானியா உள்ளிட்ட 30 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் திரிபு தொடர்பிலான ஆய்வுகளை சர்வதேச சுகாதார நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பெரு நாட்டில் இதுவரை 2,066,677 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 193,389 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

error

Enjoy this blog? Please spread the word :)