சற்று முன் சில பகுதிகளில் உடனடி ஊரடங்கு அமுலாகியது!!
அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பொலிஸ் பிரிவுகளிற்கு ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
உகண, தமன பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலில் வரும் வகையில் ஊரடங்கு அமுலாகியுள்ளது.
வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றும் சிப்பாய்களில், கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட இருவர் இந்த பகுதிகளிலுள்ள வீடுகளிற்கு அண்மையில் விடுமுறையில் வந்து சென்றிருந்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளிற்குள் யாரும் உள்நுழையவோ, வெளியேறவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது.

