புதினங்களின் சங்கமம்

உலகை அச்சுறுத்தும் ‘டெல்டா’ வைரஸ் இலங்கையிலும் தீவிரம் பெறும் அபாயம் குறித்து எச்சரிக்கை!

இந்தியாவில் திரிபு பெற்று இன்று உலகின் 80 இற்கு மேற்பட்ட நாடுகளில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ‘டெல்டா’ வைரஸ் இலங்கையிலும் தீவிரம் பெறும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 8 வாரங்களுக்குள் இந்நாட்டின் பிரதான கொவிட் வைரஸ் வகையாக ‘டெல்டா’ வகை வைரஸ் மாறலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஷேடமாக இந்த வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்யும் நிபுணர்களினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.