புதினங்களின் சங்கமம்

யாழில் விதானைமாரின் திருவிளையாடல்!! மோசடிக்காரர்கள் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள்??

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சிவில் பாதுகாப்பு மீள்உருவாக்க குழுவில் பல சட்டவிரோத நடவடிக்கையுடன் தொடர்புடைய நபர்களை உள்வாங்குவதற்காக கிராம சேவகர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜே-86 ஜே-87 கிராம சேவகர் பிரிவில் உள்ள சிவில் பாதுகாப்பு குழுவில் உள்வாங்க சிபார்சு செய்யப்பட்டவர்களில் வாகன மோசடி காசோலை மோசடி பழைய இரும்பு திருட்டு செயல் கள்ளமாடு கடத்தல் காணி மோசடி உள்ளிட்ட சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆவர் .

இவ்வாறான சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடைய நபர்களை சிபர்சு செய்யும் நடவடிக்கையில் கிராமசேவகர்கள் ஈடுபட்டு வருவதுடன் அதற்காக அன்பளிப்புகளையும் பெற்றுள்ளனர்.

மேலும் சிவில் பாதுகாப்பு குழு அடையாள அட்டையை பெற்று மேலும் குறித்த மோசடியாளர்கள் குற்றச்செயலில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக குற்றஞ்சுமத்தப்படுகிறது.