புதினங்களின் சங்கமம்

வடமராட்சி கிழக்கு – குடத்தனையில் துப்பாக்கி ரவை பெட்டிகள் மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு – குடத்தனை பகுதியில் ஐந்து துப்பாக்கி ரவை பெட்டிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இன்று (ஜூன்-18) நண்பகல் குறித்த ரவைப் பெட்டிகள் கடற்கரைப் பகுதில் காணப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த துப்பாக்கி ரவைப் பெட்டிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.