யாழ் அனலைதீவு கடலில் கஞ்சா கடத்தல் !! இருவர் கைது! (Photos)
அனலைதீவு கடற்பரப்பால் இந்தியாலிலிருந்து கஞ்சா கடத்தி வந்த இருவர் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
அனலைதீவு கடல் பகுதியால் இருவர் கஞ்சா கடத்தி வருவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அவர்கள் கடலில் வைத்து கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த கஞ்சாப் பொதிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் கைது செய்யப்பட்ட 26 மற்றும் 31 வயதுகள் கொண்டவர்களில் ஒருவர் மன்னாரையும் மற்றையவர் அனலைதீவு பகுதியையும் சேர்ந்தவர்கள்.
கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் அவர்கள் பொலிஸாரிடம் கையளிக்கப்படவுள்ளளனர்.