கரவெட்டியில் 10 மாத குழந்ததை, கர்ப்பவதி உட்பட 13 பேருக்கு கொரோனா!!
கரவெட்டியில் பத்துமாத குழந்தை உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரவெட்டி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 10 பேரில் நெல்லியடி பொதுச் சுகாதார பிரிவில் 5 பேருக்கும், கரணவாய் கிராம அலுவலகர் பிரிவில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் யாழ் மத்திய கல்லூரி ஆசிரியரின் மனைவிக்கும், கரவெட்டி கிழக்கில் மதிப்பீட்டு திணைக்களத்தின் பணிப்பாளரின் மனைவி மற்றும் பிள்ளைக்கும், மாவட்ட செயலகத்தில் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க பணியாளர் அவர்களுடன் தொடர்புபட்ட அவரின் சகோதரி, பெறாமகள் மற்றும் 10 மாத குழந்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கரணவாய் பகுதியில் செலிங்கோ தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் கர்ப்பவதியான மனைவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் கரவெட்டி வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேருக்கும், பொலீஸார் இருவருக்கும் பருத்தித்துறை நீதிமன்றில் பணி புரிந்த ஒருவருக்கும் என ஒட்டு மொத்தமாக வடமராட்சி பகுதியில் 13 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

