பூநகரியில் மீன் பிடிக்கச் சென்று பரிதாபமாக இறந்த 3 பிள்ளைகளின் தந்தை
பூநகரி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட செல்விபுரம் மூலையடம்பன் குளத்தில் மீன் பிடிப்பதற்காக சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்ள்ளார். 59வயதுடைய பூநகரி செட்டியகுறிச்சியைச்சேர்ந்த செல்லையா சுந்தரலிங்கம் என்ற நபரே இறந்தவராவார்.
இறந்தவரும், மற்றொருவரும் குறித்த குளத்தில் மீன் பிடிப்பதற்காக நண்பகல் சென்ற வேளை குறித்த நபர் நீரில் முழ்கிய நிலையில் மற்றவரால் காப்பாற்ற முடியாத நிலையில் உடனடியாக அருகிலுள்ளவர்களுக்கு தெரியப்படுத்தியதைத்தொடர்ந்து நீரில் முழ்கியவரை மீட்டு பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.

