FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

நீர்கொழும்பில் சிங்கள கிறீஸ்தவர்கள் – முஸ்லீம்கள் கடும் மோதல்!! பற்றி எரிகின்றது நீர்கொழும்பு(Video)

உடன் அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று இரவு முதல் நாளை காலை 7 மணிவரை குறித்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதையடுத்தே பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள கிறீஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும்  இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு முச்சக்கரவண்டி ஒன்று உடைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த இருபகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோ தரிப்பிடத்திற்காக அப்பகுதியில் முரன்பட்டு இருந்ததாகவும் அவர்களே சந்தர்ப்பத்தைப் பாவித்து சண்டையில் இறங்கியதாகவும் தெரியவருகின்றது.

மேலும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரிக்கப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலே பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி

சிகான்..