புதினங்களின் சங்கமம்

யாழ் சுண்டுக்குளி மகளீர்கல்லுாரி பெட்டைகளுக்கு சீன் காட்டிய வெடிகுண்டுதாரி இவரா??

சுண்டுக்குளி மகளீர் கல்லுாரிக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்தவர் தனது புகைப்படத்தையும் இணைத்தே அச்சுறுத்தல் விடுத்துள்ளாராம். ஒரு வேளை குறித்த இளைஞன் மீது கடுப்பில் இருக்கும் யாரோ சிலர் இவ்வாறான வேலையை செய்திருப்பார்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில மாணவர்களும் இவ்வாறான திருவிளையாடலைச் செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இருப்பினும் குறித்த புகைப்படத்தில் உள்ளவர் யார் என அறிவதில் பொலிசார் மும்முரமான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதிபரினால் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு யாழ்ப்பாணம் என்னும் அடையாளத்தை கொன்டு, சுண்டுக்குளி கல்லூரி அதிபருக்கு இந்த எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் இந்த தேசம் அல்லாஹ்வின் தேசம், இங்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாழ முடியும்.

சிலுவை தூக்கிகளோ வேறு யாருமோ வாழ முடியாதது, சிலுவை தூக்கி மாணவர்களை கொல்லுவோம். என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Image may contain: 1 personImage may contain: one or more people