யாழில் மேலுமொரு கொரோனா பலியெடுப்பு: காரைநகரைச் சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!
கொரோனா பாதிப்பு காரணமாக யாழ். காரைநகரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொரோனாப் பாதிப்புக்கு உள்ளான நிலையிலும் சுகாதார நடவடிக்கைகளுக்கு முதலில் ஒத்துழைக்காத நிலையில் பின்னர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் கோப்பாய் கொரோனா தடுப்பு மையத்திற்கு அனுப்பட்டுள்ளார்.
அங்கு உடல் நிலைப் பாதிப்பு அதிகரித்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அவருடைய சடலம் யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் காரைநகர் செம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும் பிரதேசத் தகவல்கள் அருவிக்குத் தெரிவித்தன.

