வடக்கு விவசாய அமைச்சின் செயலாளர் ஜெகூவின் பதவி பறிக்கப்பட்டது! ஆளுநருக்கு அடங்கவில்லையாம்!! நடந்தது என்ன?
வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர் ஒருவரின் பதவியை ஆளுநர் நா.வேதநாயகன் மீளப்பெற்றுள்ளார்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் எம்.ஜெகூவின் பதவி, வடக்கு மாகாண ஆளுநரால் மீளப்பெறப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதே வேளை விவசாய அமைச்சின் சிற்றுாழியர் ஒருவரை உடனடியாக மன்னாருக்கு இடமாற்றம் செய்யுமாறு ஆளுநர் பணித்தும் அந்தக் கட்டளையை ஜெகூ உதாசீனம் செய்து வந்ததாகவும் தெரியவருகின்றது. இதனையடுத்தே ஆளுநர் ஜெகுவின் பதவியைப் பறித்துள்ளதாக ஊடகத்தரப்புக்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளன.
விவசாய அமைச்சில் கடமையாற்றும் பொறியியலாளர் ஒருவருக்கும் அங்கு வேலை செய்யும் தொழிலாளி தயாநந்தகுமாருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தயானந்தகுமாரை இடமாற்றம் செய்ய விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்தது. இந்த இடமாற்றத்துக்கு எதிராக தயாநந்தகுமார் நீதிமன்றில் வழக்குத் தொடுத்திருந்தார்.இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆளுநர் தரப்பால் உடனடியாக தொழிலாளியை மன்னாருக்கு இடமாற்றம் செய்யுமாறு விவசாய அமைச்சின் செயலாளர் ஜெகுவுக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகின்றது எனவும் மீறினால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் எனவும் ஜெகு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். நீர் labour ஐ இடமாற்றம் செய்யவில்லை எனில் உமது செயலாளர் பதவி பறிக்கபடும் என ஆளுநரால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கும் ஜெகு பணியாத காரணத்தால் ஜெகுவின் பதவியும் பறிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.


