புதினங்களின் சங்கமம்

யாழ். தெல்லிப்பழை MOH இல் 12 வயது சிறுமி உட்பட 19 பேருக்கு தொற்றுறுதி!

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெல்லப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 வயது சிறுமி உட்பட 19 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பெறப்பட்டிருந்த 62 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு தரப்பில் இருந்து இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 வயது சிறுமி, 24 வயது யுவதி உள்ளிட்ட பெண்கள் 10 பேர் உட்பட இவ்வாறு 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதா மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சில சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. விபரம் விரைவில்….