புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் எரிக்து முடியாது குவிப்பு!!!

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த 30 மேற்பட்ட சடலங்கள் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் தேங்கியிருப்பதாக தெரியவருகிறது.

கடந்த 02 ஆம் திகதி கொரோனாவால் உயிரிழந்த ஒருவருக்கு 08 ஆம் திகதியே தகனம் செய்வதற்கான சாத்தியம் உள்ளதாக மாநகரசபை நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு சராசரி ஐந்து பேரின் சடலங்களை மட்டுமே தகனம் செய்யமுடியும் என்றும் கூடுதலாக எரியூட்ட முற்பட்டால் அதற்கான கருவி பழுதடையக்கூடிய சாத்தியம் உள்ளதாக மாநகர முதல்வர் இன்று தெரிவித்திருந்தமை தெரிந்ததே.