தலையும் முண்டமும் வேறாக்கப்பட்ட நிலையில் சடலம் !!
தலையும் முண்டமும் வேறாக்கப்பட்ட நிலையில் சடலமொன்று எஹலியகொடை மின்னான பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காவல் துறைக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து நேற்று முன்தினம்(18) ஸ்தலத்துக்கு விரைந்த காவல் துறை வீதியோரத்தில் காணப்பட்ட தலையில்லாத சடலத்தையும் குறித்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் புதர்களுக்குள் வீசப்பட்டிருந்த பையொன்றுக்குள் சுற்றப்பட்டிருந்த தலையையும் மீட்டுள்ளனர்.
தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வரும் காவல் துறை இச்சடலம் கலப்பிட்டமட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவருடையது என அடையாளம் கண்டுள்ளனர்.
கொல்லப்பட்ட மேற்படி இளைஞருக்கு கொலை குற்றம் சாட்டப்பட்ட வழக்கொன்று தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை எஹலியகொடை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

