திலீபனின் படம் வைத்திருந்தது குற்றமாம்!! யாழ் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை முதலாளி கைது!!
யாழ்ப்பாண பல்கலைக்கழக சுற்றிவளைப்பு தேடுதலின் போது
பல்கலைக்கழக சிற்றூண்டிச் சாலைக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்
தியாகதீபம் திலீபனின் உருவப் படத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில்
சிற்றுண்டிச் சாலையை நடாத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலயைடுத்து மேற்கொள்ளப்பட்டு
வருகின்ற சுற்றிவளைப்பு தேடுதல்களின் தொடராக யாழ் பல்கலைக்கழகம் நேற்று
சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்குள் இருந்து புலிகளின்
தலைவரின் படம் மற்றும் சினைப்பர் துப்பாக்கிக்கு பயன்படும் தொலைநோக்கி என
சில ஆயுதங்களையும் இராணுவத்தினர் மீட்டிருந்தனர்.
இதனையடுத்துபவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர்
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டனர். இவ்வாறு நேற்றுக் காலை முதல் மேற்கொண்ட சுற்றிவளைப்பு
தேடுதலின் போது பல்கலைக்கழக சிற்றூண்டிச் சாலைக்குள்ளும் புலிகளின்
திலீபனின் படம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த சிற்றூண்டிச் சாலையை நடாத்தி வந்த நபரை
இரானுவத்தினர் கைதுசெய்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் நேற்று முழுவதும் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின்
போது மூன்றுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது