இரண்டு கோவிட்19 தடுப்பூசிகளை ஏற்றியவர்களுக்கும் தொற்று ! -உலக சுகாதார நிறுவனம் ஆராய்வு

முற்று முழுதாக கோவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்ட பின் 1/3 பங்கினருக்கு கோவிட் 19 தொற்று ஏற்பட்டிருப்பதாக சிசல் தீவிலிருந்து வெளியாகிய அறிக்கை தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. தொற்றாளர்கள் எண்ணிக்கையில் 37 வீதமானோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்கள் எனவும் WHO மேலும் தெரிவித்துள்ளது
மொத்த சனத்தொகையில் 60 வீதமானோர் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்கள் ஆவர் அதில் 57 வீதமானோர் சீனாவின் சினோபர்ம் ஊசிகளையும் 43% மானோர் ஒஸ்போர்ட் அஸ்ட்ரா செனிக்காவையும் ஏற்றிக்கொண்டுள்ளனர், இறப்புகள் எதும் பதிவு செய்யப்படவில்லை எனவும் WHO மேலும் தெரிவித்துள்ளது
தடுப்பூசி ஏற்றுவதால் மட்டும் கோவிட் 19 தொற்ரறுப் பரவலை தடுக்க முடியாது எனவும் சுகாதார நடைமுறைகளையும் சமூக இடை வெளியையும் பின்பற்றுவது மிக முக்கியம் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது .

error

Enjoy this blog? Please spread the word :)