புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு குண்டு வெடிப்பில் யாழ் பல்கலைக்கழக மாணவன் பலி!!

குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டின் வெவ்வேறு இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடைபெற்ற தாக்குதலில் யாழ் பல்கலைக்கழக விவசாயபீட 25ஆம் அணி மாணவன் பரமேஸ்வரன் பிரஸ்ரின் படுகாயமடைந்திருந்தார்.

குறித்த மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.