தாய், பச்சிளம் குழந்தை, பொலிசார் உட்பட யாழில் 13 பேருக்கு கொரோனா!!
யாழ். போதனா வைத்திய சாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாழ். குடாநாட்டில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த 13 பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் வழங்கியுள்ள தகவல் மற்றம் யாழ். பேதனா வைத்தியசலை ஆய்வுகூட தரப்பில் இருந்து அருவி இணையத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்த தகவல;களின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேரின் விபரங்கள்….
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை – 04 (வெளி நோயாளர் பிரிவில் – 02, விடுதியில் – 02)
யாழ். போதனா வைத்திய சாலை – 03 (தனிமைப்படுத்தல் விடுதியில் பொலிசார் 02 பேர் உட்பட மூவர்)
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை – 03 (விடுதியில் சிகிச்சை பெற்று வரும் இருவர் மற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவர்)
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை – 02 (கணவர் தொற்று உறுதியான நிலையில், அவரது மனைவி மற்றும் ஒரு வயது 4 மாதங்களே ஆன குழந்தை)
சண்டிலிப்பாய் சுகாதார அதிகாரி பிரிவு – 01 (தொற்றாளருடன் தொடர்பில் இருந்த ஒருவர்)
யாழ். போதனா வைத்திய சாலை ஆய்வு கூடத்தில் இன்று (ஏப்-26) 249 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வடக்கில் 16 பேர் உட்பட 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை, யாழ். பேதனா வைத்தியசலை ஆய்வுகூட தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்த தகவலின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

