புதினங்களின் சங்கமம்

யாழ் சாவகச்சேரியில் இன்று இரவு கோர விபத்து!! ஒருவர் பலி!! (Photos)

சாவகச்சேரியில் சொகுசு பேருந்து மோதியதில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். நேற்று (12) பின்னிரவு 10.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. சாவகச்சேரி பழைய பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள மதுபான நிலையத்திற்கு சென்று விட்டு, வீதியை கடந்த இளைஞனே விபத்தில் சிக்கினார். கிளிநொச்சி, அக்கராயன்குளத்தை சேர்ந்த கெவின் கிஷோகுமார் (31) என்பவரே உயிரிழந்தார். யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்து ஒன்று, வீதியில் பயணித்த இளைஞனை மோதிக் கொன்றது.