மணியை மீட்டது சுமந்திரனா?? டக்கிளசா?? இதோ ஈ.பி.டி.பி உறுப்பினரின் பேஸ்புக் பதிவு!!
11.04.2021. யாழ் மாநகர கெளரவ முதல்வர் மணிவண்ணன் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டவரை மூன்று மாதமோ இல்லை ஆறு மாதமோ அதற்கு மேலயும் தடுத்து வைத்து விசாரணை செய்து முடியும்.
ஆகவே இன்று முகநூல் வாயிலாக துள்ளிக்கொண்டு இருப்பவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவரை பாதுகாப்பு அமைச்சினுடைய அனுமதி இல்லாமல் நீதிமன்றத்தில் விடுதலை செய்ய முடியுமா??என்று யோசிக்க வேண்டும். ஓம் என்று சொன்னால் ஏன் இன்று கிழக்கு மாகாணத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த சட்டத்தின்கீழ் பிணை வழங்காமல் தடுத்து வைத்திருந்தார் என்பதை கூற முடியுமா?
இன்று கெளரவ யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்களை மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு. “”கடற்தொழில் துறை கௌரவ அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதிமேதகு சனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க முதல்வர் மணிவண்ணன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். “”
இதனை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்னுடைய உத்தியோகபூர்வமான இணையதளமான E.P.D.P News.com இலும் கெளரவ அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தாவினுடைய முகப்புத்தகத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆகவே இதனை மறுப்பவர்கள் ஏன் சட்டரீதியாக நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்ய முடியாது?
எனவே இதிலிருந்து ஒன்று தெரிகிறது உண்மையான சம்பவம் “”கெளரவ முதல்வர் மணிவண்ணனை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழிருந்து விடுவித்தவர் “”கௌரவ அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தாவே ஆவர்”” இதனை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் இன்று முகநூலில் ஊழையிட்டு கொண்டிருக்கின்றார்கள். இவர்களுடைய ஊழை கௌரவ அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தாவை ஒன்றும் செய்யப்போவதில்லை. முடிந்தால் இவர்கள் வழக்குக்கு செல்லாம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இதனை மாநகர கௌரவ முதல்வர் மணிவண்ணன் அவர்களோ அல்லது அவர்கள் சார்ந்த உறுப்பினர்களோ மறுக்க மாட்டார்கள். காரணம் அவர்களுக்கு தெரியும் தங்கள் எவ்வாறு பிரச்சனைக்குள் சிக்குண்டோம் அதனை எவ்வாறு கௌரவ அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா கையாண்டார் அல்லது அணுகினார் என்பது, அவர்களுக்கு தெரியும்.
* இதே போல அங்கு சென்ற சட்டத்தரணிகள் தங்களுடைய வாதட்டத்தினால் தான் மாநகர கௌரவ முதல்வர் மணிவண்ணன் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
**இன்னும் சிலர் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்ததால் தான் அவர் விடுவிக்கப்பட்டதாக கூறுகின்றார்கள்.
***இன்னும் சிலர் சர்வதேச அழுத்தம் காரணத்தினால் தான் விடுவிக்கப்பட்டதாக கூறுகின்றனர்கள்.
எனவே ஆனந்த சுதாகரன் உட்பட அரசியல் கைதிகளை விடுவிக்க இவர்களால் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆகவே இதுவும் “””ஆட்சி அமைப்பதற்கு உதவி கேட்டுவிட்டு பின்னர் நாங்கள் கேட்கவில்லை என கூறுவது போல தான்”””. இதற்கு தான் கூறுவது “”பாத்திரம் அறிந்து பிச்சை கொடு என்று”’
ஆகவே யாழ் மாநகர கெளரவ முதல்வர் மணிவண்ணன் அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக கௌரவ அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்பு கொண்டு கதைத்தவர்கள் என்ன கூறப்போகின்றார்கள்???????
இப்படியானவர்களின் விடயத்தில் தலையிடும் போது நாம் சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளோம்!!!!!
பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன கூறப்போகின்றார்கள் என்று.!!!!


