கறுப்பு சிவப்பு சைக்கிளில் களமிறங்கிய நடிகர் விஜய்!!

பெட்ரோல் விலையேற்றத்தை கண்டிக்கும் விதமாக இளைய தளபதி விஜய் வாக்களிக்க சைக்கிளில் செல்கிறார்….
தன்னை திட்டமிட்டு மதரீதியாக பிரித்துப் பழி போட்டது நடிகர் விஜய்யை மிகவும் அப்செட் ஆக்கியுள்ளதாம். விஜய்யைப் பொறுத்தவரை மனிதம்தான் முதலில், பிறகு தான் மதம். கிறித்துவராக இருந்தாலும் இந்து மதக் கோவில்களுக்கு செல்வார், நன்கொடை கொடுப்பார். அதேபோல அவரது இரசிகர்களிலும் எந்தவித மதவேறுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் உள்ளனர்.
இப்படிப்பட்ட தன்னையே மதரீதியாக பிரித்து வெறுப்பு அரசியல் செய்யமுடியுமென்றால் இவர்களால் எதையும் செய்ய இயலும் என்பதை விஜய் உணர்ந்திருக்கிறார்.
முதலில் இந்தத் தேர்தலில் எந்த தரப்பையும் ஆதரிக்க வேண்டாம் என முடிவு செய்திருக்கிறார். ஆயினும் தேர்தல் நெருங்க நெருங்க அதிமுக பாஜக செய்த வெறுப்பு அரசியல், அமைதி விரும்பியான விஜய்யை மேலும் காயப்படுத்தி உள்ளது. இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் நாடு தாங்காது என நெருங்கிய நண்பர்களிடம் வருத்தப்பட்டிருக்கிறார். அவர்கள் கொடுத்த ஐடியா தான் கறுப்பு சிவப்பு சைக்கிள்.
பெட்ரோல் விலை உயர்வையும் தேர்தலையும் இணைத்து மீம்சுகள் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. அதே கான்செப்ட்டை விஜய்யும் கையில் எடுத்துள்ளார். பெட்ரோல் விலை உயர்வில் இருந்து காக்க வந்த சைக்கிளாக திமுக கூட்டணியை குறிக்கும் வண்ணம் கறுப்பு சிவப்பு நிறத்தை தேர்ந்தெடுத்துள்ளார். விஜய்யின் குறியீட்டால் உற்சாகமடைந்த அவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் சைக்கிளில் சென்று வாக்களிக்க தயாராகி உள்ளதாக செய்திகள் வருகின்றன.
– சினி எக்ஸ்பிரஸ்
May be an image of 1 person, motorcycle and text that says "நீலாங்கா சென்ளை FRMECR-R வாக்குப்பதி $ LIVE நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் புறப்பட்டார் Polimer NEWS"
May be an image of one or more people, people standing and text that says "லாங்கரை, சென் வாக்குப்பதிவுி டநடிகர் விஜய் வா க்களிக்க சைக்கிளில் புறப்பட்டார் சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் புறப்பட்டார் Polimer NEWS 09:12AM TAMILNADU SUB NOW"
error

Enjoy this blog? Please spread the word :)