பல்கலைக்கழகங்கள் மீள ஆரம்பமாகின்றன!
புதுவருடத்தின் பின் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர்.சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
கொரோனாத் தொற்றுக் காரணமாகப் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்த நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை, சுகாதார ஆலோசனைக் கோவையொன்றைப் பல்கலைக்கழகங்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், தற்போது பல்கலைக்கழகங்களில் பரீட்சைகளை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் குறிப்பிட்டார்.

