யாழ்ப்பாண வீதியில் கனகசபாபதி செய்த அலங்கோல வேலை!! அவதானம் மக்களே!! (Photos)
இது கொஞ்சம் விசித்திரமான பதிவு தான்….
காலையில் சங்கானை பேருந்து நிலையம் கடந்து வருகையில் முன்னால் ஒரு கார் போய்க்கொண்டு இருந்தது திடீரென்று அக்கார் வேகத்தை மிகைப்படுத்தி முன்னேற எனக்கு குறுக்காக முன்னே பயணித்த மோட்டார் சைக்கிள் #சமிக்ஞைகள் ஏதுமின்றி நடுவீதிக்கு வர அவரை மோதி ஒரு விபத்து உருவாகக் கூடாது என்ற காரணத்துக்காக sudden ah break பிடித்து நிற்பாட்டும் முயற்சியில் மோட்டார் சைக்கிள் சரிந்தது நானும் விழுந்தேன் அருகிலிருந்த கடைகளில் நின்ற அண்ணாமார் ஓடி வந்து உயர்த்தினர் ,தண்ணீர் தந்துதவினார்கள் எனை ஆசுவாசப்படுத்தி நிமிர்கையில் யார் அந்த விழுகைக்கு காரணமோ அவரை காணவில்லை. அவர் தன் பாட்டிலே ஒரு கடையில் பொருட்களை வாங்கி கொண்டிருந்தார். அவரை அழைத்து என்ன பதில் என்று கேட்டேன் ???
கிடைத்தவை:-
1.தன்னுடைய மோட்டார் சைக்கிளில் நான் மோதவில்லையாம்.
2.சமிக்ஞை இன்றி தான் பயணித்ததால் நான் விழவில்லையாம் அது என் கவனக்குறைவும் அதிவேகமுமாம்
3.என்ன வேண்டுமென்றாலும் செய்வதை செய்யட்டுமாம் தனக்கொரு பயமும் இல்லையாம்.
4.இப்ப இருக்கிற பெடியள் எல்லாம் இப்பிடிதானாம்
இப்படி மனிதாபிமானமற்ற பதில்கள் வந்தன.அப்போது நான் நினைத்தேன் இப்படி பட்ட ஒருவர் காயமடையக்கூடாது என நினைத்து காயம் பட்டதை நினைத்து வெட்கினேன் இத்தனை வயது வந்தும் துளியளவும் மனிதமில்ல மண் உருவமொன்றை இடித்து தள்ளிவிட்டு கடந்திருக்கலாமோ என எண்ணினேன்.
ஒரு நடுத்தர குடும்பத்தில் வாழும் ஒருவனுக்கு ஒரு விபத்து ஏற்படுத்தும் வலிகளை அனுபவித்தவர்களாலேயே புரிய முடியும்.என்னையும் வண்டியையும் சீர் செய்ய கேட்க அதெல்லாம் செய்யமுடியாதாம். ஒரு பக்கம் காயத்தின் வலி மறுபக்கம் கஷ்டத்தின் வலி..இறுதியாக ஒன்றைக்கூறினேன் “சமிக்ஞை தராத தங்கள் குறுக்கீடு இடம்பெறாதிருப்பின் என் பயணம் தடையின்றி நகர்ந்திருக்கும்” என்று விட்டு அவரைக்கேட்டேன் புகைப்படம் எடுக்கவா என்று ஆம் என்றுவிட்டு IC உம் தந்தார் உன்னால என்ன செய்ய முடியேமோ செய் என்றார் சறத்தை உயர்த்திக்கட்டியவாறு.
துளியளவும் இரக்கமோ தவறை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமோ இல்லாத ஜடத்துடன் பேசி என்ன பயன் என விலகினேன்.
இத்தனைக்கும் எனை தூக்கிவிட்டு தண்ணீர் தந்துதவிய அண்ணன்களுக்கு நன்றிகள்.???
கீழே அவரின் புகைப்படம் இணைக்கிறேன் இனி எவராவது அவருக்காக காயம் பட்டு கவலைப்படகூடாது என்பதற்காக….
தவறை ஒத்துக்கொள்ளவில்லை என்பதை தாண்டி விழுந்தவனை தூக்கிவிடும் அடிப்படை மாண்பு கூட இல்லா மனிதன்.
பெயர்:-கனகசபாபதி குகதாசன்
Facebook மூலப்பதிவு :: Ravichandran Kirushanthan



