புதினங்களின் சங்கமம்

5 இழுவை படகுகளோடு- வட பகுதி கடற்பரப்பில் 54 இந்திய மீனவர்கள் கைது!(Photos)

வட பகுதி கடற்பரப்பில் எல்லைமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் 54 தமிழக மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது மன்னார் கடற்பரப்பில் 2 இழுவைப் படகுகளுடன் 20 மீனவர்களும்
முல்லைத்தீவு கடற்பரப்பில் 2 இழுவைப் படகுகளுடன் 20 மீனவர்களும்
யாழ். மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் ஒரு இழுவைப் படகுடன் 14 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து மீனவர்களும் கொவிட் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய தனிமைப் படுத்தலின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.