தற்போது யாழ்குடா நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளயாழ் குடா நாட்டு வர்த்தகர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படவேண்டும் என யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் ஆர்.ஜெயசேகரன் தெரிவித்தார்.
தற்போது யாழ்நகரில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த நிலை நிலை தொடர்பில் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்றைய தினம் யாழ் நகர் சந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது 9 பேர் கொரோனா தொற்றென இனங்காணப்பட்டுள்ளார்கள். எனவே தற்போது பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் வியாபார நடவடிக்கைகளுக்கு செல்லும்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளிகளை பேணி தமது வியாபார செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
அத்தோடு வியாபார நிலைய உரிமையாளர்கள் மற்றும் வியாபார ஸ்தானங்களில் கடமையாற்றுவோர் ஏற்கனவே சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதன் மூலமே இந்த கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
தற்போதைய நிலையில் கொரோனா தொற்று நிலைமை யாழ்குடா நாட்டில் அதிகரித்து காணப்படுகின்றது எனவே யாழ் குடாநாட்டை முடக்க வேண்டிய நிலைகூட ஏற்படலாம் எனவே பொதுமக்கள் வர்த்தகர்கள் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.





