Home புதினங்களின் சங்கமம் பிருத்தானியாவில் சாரதி அனுமதிப்பத்திர பரீட்சை மோசடி செய்த இலங்கை காவாலிகள் உட்பட 6 பேர் கைது!!...

பிருத்தானியாவில் சாரதி அனுமதிப்பத்திர பரீட்சை மோசடி செய்த இலங்கை காவாலிகள் உட்பட 6 பேர் கைது!! நடந்தது என்ன?

பிரித்தானியாவின் தெற்கு லண்டனின் கிராய்டன் நகரில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பவுண்டுகள் பெருமதியான சாரதி அனுமதிப்பத்திர எழுத்துப் பரீட்சை மோசடியில் ஈடுபட்ட கும்பலுக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மெற்றோபொலிட்டன் பொலிசாரின் விசாரணைகளைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் திகதி கிராய்டன் கிரவுன் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் பிரதான குற்றவாளிகளுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டில் வெறும் இரண்டு மாதங்களிலேயே முகத்திற்குப் பொருந்தாத போலி முடிகள் மற்றும் முகக்கவசங்களை அணிந்து 118 போலிப் பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளன. பியர்சன் பரீட்சை நிலையத்தின் முன்னாள் முகாமையாளர் 42 வயதான சித்ரா குரேஷி மற்றும் இணை ஏற்பாட்டாளரான 32 வயதான அனுஜன் தங்கராஜா ஆகியோர் இணைந்து ஒரு போலிப் பரீட்சை தொழிற்சாலையை நடத்தியுள்ளனர். ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடம் தலா 1000 பவுண்டுகளாக பெற்று அவர்களுக்குப் பதிலாகப் போலி நபர்களைப் பரீட்சை எழுத வைத்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த 32 வயதான புஷ்பகுமார மொறக்கம் மணகெதர மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 37 வயதான சதாம் ஹுசைன் ஆகியோர் இணைந்து 70 பரீட்சைகளை எழுதியுள்ளனர். சிசிடிவி கெமராவில் புஷ்பகுமார தனது நிறத்திற்குப் பொருந்தாத போலி முடியைச் சரிசரித்துக்கொண்டே பரீட்சை எழுதிய காட்சி பதிவாகியுள்ளது. 2021 மே மாதம் 27ஆம் திகதி ஒரே நாளில் மட்டும் சுமார் 50 போலிப் பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளன. பியர்சன் பாதுகாப்பு அதிகாரியின் கெமரா கண்காணிப்பில் இந்த மோசடி அம்பலமானது. பொலிசார் நிலையத்தைச் சுற்றி வளைத்தபோது அங்கு பணியாற்றிய ஊழியரான 43 வயதான சசிராஜ் ஜோசப் மச்சான் பணத்தை அப்புறப்படுத்தி பொலிஸ் வந்துவிட்டது என அனுப்பிய குறுஞ்செய்தியும் சிக்கியுள்ளது.

கிராய்டன் கிரவுன் நீதிமன்றம் அனுஜன் மற்றும் சசிராஜ் ஆகியோருக்கு தலா 44 மாதங்களும் சித்ரா குரேஷிக்கு 43 மாதங்களும் சதாம் ஹுசைனுக்கு 36 மாதங்களும் புஷ்பகுமாரவிற்கு 32 மாதங்களும் சிறைத் தண்டனை விதித்துள்ளது. தகுதியற்ற சாரதிகளை வீதிகளில் அனுமதித்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்ததாக நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் 2025ஆம் ஆண்டில் மட்டும் 2,844 பரீட்சை மோசடிகள் பதிவாகியுள்ளன. தற்போது இந்த கிராய்டன் பரீட்சை நிலையம் நிரந்தரமாக மூடப்பட்டு அதன் கதவில் இங்கே சாரதி பரீட்சைகள் நடத்தப்படுவதில்லை என அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments