புதினங்களின் சங்கமம்

யாழில் முதல் முறையாக கோடிக்கணக்கான பெறுமதியான போதைப் பொருள் மீட்பு!!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் முதன்முறை அதிகளவு அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சுமார்
2 கோடி ரூபா பெறுமதியான ஒன்றைரைக் கிலோ அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

“வடமராட்சி தொண்டமனாறு – கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சந்தேகத்துக்கு
இடமான இருவர் நடமாடினர். அவர்கள் பொலிஸார் வருவதைக் கண்டதும் பொதி ஒன்றை போட்டுவிட்டு
தப்பி ஓட்டம் எடுத்தனர்.

அந்தப் பொதியைச் சோதனையிட்ட போது சுமார் ஒன்றரைக் கிலோ அபின் போதைப்பொருள் காணப்பட்டது.
அந்த போதைப்பொருள் பொதி வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது” என்று
பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி 2 கோடி ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது என்றும்
பொலிஸார் கூறினர்.

காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்புக் குற்றத்தடுப்புப்
பிரிவினரே இந்த போதைப்பொருளை மீட்டனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இவ்வளவு பெறுமதியான அபின் போதைப்பொருள் கைப்பற்றப்படுவது
இதுவே முதன்முறை எனத் தெரியவருகிறது.