யாழ் சுதுமலைப் பெண் கொரோனாவுக்கு இலக்காகி மரணம்!!
யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நால்வருக்கு கொரோனோத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுதுமலையைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவர் தொற்று அறிகுறிகளுடன் யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சென்ற நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோலதெல்லிப்பளையைச் சேர்ந்த 32 வயதுடைய குடும்பப் பெண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது (குறித்த பெண்ணின் குடும்பத்தில் மற்றொருவருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது)
மன்னாரில் தொற்று அறிகுறியுடன் வைத்தியசாலைக்குச் சென்ற நபர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

