கிளிநொச்சியில் நடக்கும் அலங்கோலங்கள்!! எதனால்??

பூநகரியில் கணவனின் கத்தி குத்தில் மனைவி பலி.
சிவபுரத்தில் மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்.
அம்பாள்குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வட்டக்கச்சியில் சிறுவனின் கத்தி குத்தில் இளம் குடும்பஸ்தர் பலி.
உமையாள்புரத்தில் மணல் அகழ்வில் ஈடுப்படுவோர்களுக்கிடையில் மோதல் ஒரு பலி மூவர் படுகாயம்.
கனகபுரத்தில் மகனின் தாக்குதலில் தந்தை பலி.
முழங்காவில், சோலைப்பல்லவராயன்கட்டு மாதிரி கிராமம் பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பச்சிலைப்பள்ளி தம்பகாமம் மாமுனை ஆற்றங்கரை காட்டுப் பகுதி வீதியில் இனம் தெரியாத நபர்களால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது வாள்வெட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலி.
விநாயகபுரத்தில் உடன் பிறவா சகோதரனின் தாக்குதலில் 7 வயது சிறுவன் பலி.
சிவபுரத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை அடித்துக் கொலை.
நாளாந்தம் இவ்வாறு நடந்துகொண்டே இருக்கிறது. இதனை தவிர தற்கொலைகள், வாள் வெட்டுகள், கொள்ளை என ஒருபுறம். மறுபுறம் கஞ்சா,கசிப்பு, என என்னவெல்லாம் நடக்க கூடாதோ அவை அனைத்தும் நன்றாகவே நடந்து வருகிறது. என்னவெல்லாம் நடக்க வேண்டுமோ அவை ஒன்றும் நன்றாக நடப்பதாக இல்லை.
error

Enjoy this blog? Please spread the word :)