புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

மனைவி, மகள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கணவன் தலைமறைவு!

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (20/03) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதனால் படுகாயமடைந்த அவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

வாள்வெட்டில் ஈடுபட்ட நபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.