இலங்கைக்கு இத்தாலியில் இருந்து இளைஞர் ஒருவர் கண்ணீருடன் விடுத்துள்ள கோரிக்கை!(video)
குறைந்தது ஒருவாரமாவது இலங்கையை முடக்கி கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும்படி இத்தாலியில் உள்ள இலங்கை பிரஜைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் இத்தாலியிலுள்ள இலங்கையர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் கண்ணீருடன் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.
இத்தாலியில் தினமும் கொரோனாவுக்குப் பலியாகும் 300 பேரைப் போன்று இலங்கை மக்களும் பலியாவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த விவகாரத்தை , அரசியல் அல்லது மதவிவகாரத்துடன் இணைத்துக் கொள்ளாமல் ஒருவாரத்திற்காவது இலங்கையில் உள்ளவர்களைத் தனிமைப்படுத்தி நிவாரண நடவடிக்கையை மேற்கொள்ளும்படியும் அந்த இளைஞர் கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்.