புதினங்களின் சங்கமம்

கிழக்கில் புழக்கத்தில் விட தயாரான 5000ரூபா தாள் பெரும் தொகை போலிப்பணம் !!!

கிழக்கிலுள்ள வர்த்தக நகரங்களான அக்கரைப்பற்று ,கல்முனை,களுவாஞ்சிக்குடி,மட்டக்களப்பு,செங்கலடி,வாழைச்சேனை,மூதூர்,திருமலை நகரங்களில் புழக்கத்தில் கலந்துவிட 5000ஆயிரம் தொகை ஒத்த பணத்தாள்களை தயாரித்த கும்பல் ஒன்று அம்பாரை நிந்தவூர் நகரில் கைது செய்து பெரிய சதித்திட்டம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது,
இதே போன்று போலிப்பணத்தாள்கள் நிந்தவூரை அண்மித்த சாய்ந்தமருது பகுதிகளில் கடந்த சஹ்ரான் பயங்கரவாத தாக்குதல் சம்மந்தப்பட்ட வீட்டிலிருந்து மீட்கப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும்,
இவ்வாறன போலிப்பணத்தாள்களை மாற்று சமுக வர்த்தகர்கள் தமிழ் கிராமங்களில் கலந்து பாவனைக்கு விட்டால் மக்களின் நிலை மிகவும் ஏமாற்றத்திற்கு உரியதாக வாய்ப்பு உள்ளது .
இதில் 7 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான கள்ளநோட்டுக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (15) வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அக்கரைப்பற்று பொலிஸாரினால் குறித்த மூவரும் கைதாகியுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்து இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர்.
கைதாகிய குறித்த சந்தேக நபர்கள் தங்கிய வீட்டில் இருந்து பிறின்டர் மற்றும் கணனி உள்ளிட்ட 5000 ரூபா நோட்டு பணம் அச்சிடும் தாள்கள் அச்சிடப்பட்ட பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும், இவ்வாறு கைதான நபர்கள் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் ஒலுவில் பாலமுனை கல்முனை ஆகிய பகுதியை சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைதானவர்களாவர்.
இதில் கைதான சந்தேக நபர் ஒருவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னரும் கள்ள நோட்டுக்களை அச்சடித்து விநியோகித்த குற்றச்சாட்டில் கைதாகி விடுதலையானவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

May be an image of one or more people and people standingMay be an image of moneyNo photo description available.May be an image of moneyMay be an image of moneyNo photo description available.