டெங்கு நோய் மகனை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற தந்தை என்ன சொல்கின்றார் கேளுங்கள்!!(Photos)

யாழில் இருப்பவர்கள் வைத்திய சாலை விடயத்தில் ஒன்றை முழுமையாக நம்புங்கள். வைத்திய வசதிகள் அடிப்படையிலும், வைத்தியர் தாதியரது தகமையடிப்படையிலும் சிறந்தது யாழ். போதனா வைத்தியசாலையே. டெங்கினால் மோசமாக பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலைக்கு போய் பின் போதனா வைத்தியசாலையில் ஒருவாரம் எம் ஒரு வயது மகனை வைத்திருந்ததில் உணர்ந்தது இது. யாருக்காவது பணம் அதிகமாக இருந்து இதர சொகுசுகளுடன் வைத்தியம் பார்க்க விரும்பினால் மட்டும் அதுவும் நோயினுடைய தாக்கம் குறைவாக இருந்தால் மட்டும் தனியார் வைத்தியசாலைகளை நாடுங்கள்.
என்ன, போதனா வைத்தியசாலையின் சாபக்கேடு கழிவறைகளே. என்னதான் சுத்தப்படுத்த ஊழியர்களை அமர்த்தினாலும் பாவிக்கும் நம்மவர்களே இதன் கேவலத்துக்கு காரணம்.
நிறைவில் எங்கள் திருப்தியை காட்டும் வகையில் குழந்தைகள் வார்டு ஒன்றுக்கு முழுமையாக ஜன்னல் திரைச்சீலை போட்டுக்கொடுத்தோம். வைத்தியசாலைக்கு ஏதாவது ஒன்று செய்கிறோம் என நேந்த நேத்திக்கடனையும் நிறைவேற்றினோம்.

நன்றி

முகப்பக்கம்

வாசித்த பின் விழிப்புணர்வுக்காகப் பகிர்ந்து கொள்ளுங்கள்

Image may contain: one or more people and indoor Image may contain: 1 person, sitting, table and indoorImage may contain: 1 person, indoorImage may contain: 1 person, standing and indoorImage may contain: one or more people and people standing

error

Enjoy this blog? Please spread the word :)