“சூம்”மீற்றிங்கில் இருந்த பிரபல வர்த்தகருக்கு முத்தம் கொடுக்க முற்பட்ட மனைவி!! வைரல் வீடியோ!!

ஜூம் வீடியோ காலில் அலுவலக மீட்டிங்கில் இருந்த கணவருக்கு, மனைவி முத்தம் கொடுக்க முயன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

கொரோனா பரவல் ஏற்பட்டதையடுத்து உலக நாடுகளில் அனைவருமே வீட்டில் இருந்து அலுவலக வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கலந்துரையாடல்கள், மீட்டிங் போன்றவையும் ஜூம், கூகுள் உள்ளிட்ட வீடியோ கான்ஃபெரன்ஸ் தளங்கள் வாயிலாகவே நடைபெற்று வருகின்றன.

மிகவும் சீரியசான மீட்டிங்குகள் வீட்டில் இருந்தே பார்க்க வேண்டியிருப்பதால் வீட்டு சூழல்கள் சில நேரங்களில் மீட்டிங்கிற்கு இடையூராக மாறிவருகின்றன. சில நேரங்களில் ஆச்சரியமூட்டும், அதிர்ச்சியூட்டும், விநோத சம்பவங்களும் நடைபெறுகின்றன.

சமீபத்தில் இது போன்றதொரு சம்பவம் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது. அதில் வீட்டிலிருந்தே ஜூம் செயலி வழியாக அலுவலக மீட்டிங்கில் கலந்து கொண்டிருக்கும் கணவரை நெருங்கி வந்த, மனைவி மீட்டிங் நடந்து கொண்டிருந்ததை அறியாமல் அவருக்கு முத்தமிட முயல்கிறார்.

மனைவியின் செயலால் செய்வதறியாது திகைத்த கணவர் சூழலை சமாளிக்கும் பொருட்டு அருகில் வந்த மனைவியை விலக்கி விட்டு, இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது, நீ என்ன செய்கிறாய் என தன் மனைவிக்கு மீட்டிங் குறித்து தெரியப்படுத்துகிறார். உடனே நிலைமையை உணர்ந்த மனைவியும் ஏதோ வேலை இருப்பதாக பாசாங்கு செய்து சமாளித்துவிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)