புதினங்களின் சங்கமம்

இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்!

இன்று (22) இரவு 8 மணி முதல் நாளை (23) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக நேற்று (21) மாலை முதல் இன்று (22) காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.