இந்தச் சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகி கடலுக்குள் வீழ்ந்தமையால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் கற்கோவலத்தைச் சேர்ந்த பவிதரன் (வயது-30) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரிழந்தார்.

விபத்து இடம்பெற்ற வீதியூடாக இன்று காலை பயணித்தவர்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.