மாதம் மாதம் ஒரு மில்லியன் ரூபாய் லஞ்சம் பெறும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்!!
முன்னாள் முஸ்லிம் அமைச்சரிடமிருந்து மாதம்தோறும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பணம் வாங்கி வரும் தகவல் அம்பலமாகியுள்ளது.
பல வருடங்களாக வன்னி மாவட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாதந்தோறும் ஒரு மில்லியன் ரூபாவை முன்னாள் முஸ்லிம் அமைச்சரிடமிருந்து பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வன்னியில் தான் மேற்கொள்ளும், அபிவிருத்திப்பணிகள் மற்றும் தனது தனிப்பட்ட தொழில்சார் முயற்சிகளுக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக லஞ்சமாக இந்த ஒரு மில்லியன் ரூபாவை வன்னியின் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பல வருடங்களாக பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் தென்னிலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வன்னியில் சில இளைஞர்களை சந்தித்து பேசிய போதே குறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளனர்.

