புதினங்களின் சங்கமம்

‘பொ2பொ’ போராட்டத்தில் பங்கேற்ற செயற்பாட்டாளர்கள் மீது முல்லை பொலிஸ் வழக்கு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தினை முன்னெடுத்த குற்றச்சாட்டில்
பிரமுகர்களுக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்களினால்
பி அறிக்கையின் அடிப்படையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை
உறுப்பினர்கள், சமூகப் பிரநிதிகள், மதத் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் என பலருக்கு
எதிராக குறித்த மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

போராட்டத்திற்கு முன்பாக பொலிஸாரால் குற்றம் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்து தாக்கல்
செய்யப்பட்ட ஏஆர் அறிக்கையின் அடிப்படையிலான வழக்குகள் மீளப் பெறப்பட்டே புதிய வழக்குகள்
தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 17ம் திகதி வரையில் குறித்த வழக்கினை ஒத்திவைப்பதாக
நீதிபதி லெனின்குமார் அறிவித்தார்.