புதினங்களின் சங்கமம்

யாழ்.குப்பிழானில் பரபரப்பு: பற்றைகளுக்கு நடுவே திடீர் சிவலிங்கம்! (Videos, Photos)

யாழ். குப்பிழான் வடக்கில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றுக்குள் பற்றைகளுக்கு நடுவே சிவலிங்கம் மற்றும் நந்தி, பலிபீடங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள தனியார் காணியொன்றுக்குள்ளேயே குறித்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

குறித்த காணியின் ஒரு பகுதி பெரும் பற்றைகள் சூழ்ந்து காணப்படும் நிலையில் பற்றைகளின் ஒரு சிறிய பகுதி துப்பரவாக்கப்பட்டு அதன் நடுவே மேற்படி சிவலிங்கம் மற்றும் நந்தி, பலிபீடம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவதானித்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது ஊர் முழுவதும் தகவல் பரவி வருவதால் குறித்த பகுதிக்கு மக்கள் பலரும் சென்று சிவலிங்கத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டு ஆச்சரியத்துடன் தரிசித்தும் செல்கின்றனர்.