யாழில் மினிபஸ்காரனின் அந்தரத்துக்கு மூதாட்டியின் கால் நசுக்கப்பட்டது!! (Photos)
திருநெல்வேலி சந்திக்கு அருகாமையில் தனியார் பேருந்து (மினி பஸ்) ஒன்றிலிருந்து வயதான பெண்மணி ஒருவர் பஸ்ஸினுள் ஏற முற்பட்ட வேளை சாரதியின் அவசரபோக்கு காரணமாக சடுதியாக பேருந்தினை எடுத்துள்ளார்.
இதனால் நிலைதடுமாறி கிழே விழுந்த வயதான பெண்மணியின் கால் பேருந்தின் பின் சில்லில் அகப்பட்டு சிதைவுற்றது. உடனடியாக அந்த பெண்மணியை கார் ஒன்றில் வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.
உங்களுடைய அவசர போக்கும் போட்டிக்கு வாகனம் ஓடுவதாலும் ஏற்படும் விளைவுகள் உங்களுக்கு வலிப்பதில்லை. இப்பொழுது அந்த வயதான பெண்மணியின் நிலைக்கு உங்கள் பதில் என்ன வாகன சாரதி அவர்களே. அந்த பெண்மணி உனது அம்மாவாக இருந்தாலும் அப்படி தான் வாகனத்தினை சடுதியாக எடுப்பாயா??? பழி பாவங்களை சேர்த்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுங்கள். தெரிந்து தவறுசெய்யும் போது ஒன்றை யோசித்துக்கொள்ளவேண்டும் உங்கள் வருங்கால சந்ததியினை கடுமையாக பாதிக்கும் என்பதை மறந்துவிடகூடாது. சட்டங்கள் கடுமையாக்கபடாதவரை தப்புக்களும் குறையப்போவதில்லை.


