காலி, ஹபராதுவ – கினிகல பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் 82 மற்றும் 87 வயதுடைய இரு முதிய பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த இருவரும் திருமணமாகாத ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் எனவும், அவர்கள் சகோதரிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் உடல்களில் காயங்கள் இருந்ததாகவும், அவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபோது, கொலை செய்து, உடல்களை வீட்டின் பின்புறத்தில் வீசிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களின் மரணம் தொடர்பான காரணம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





