சிறைச்சாலை விதிமுறைகளின்படி, 3 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது, சிறைச்சாலையால் வழங்கப்படும் சிறைச்சாலை சீருடையையே அணிந்திருக்க வேண்டும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சேனக்க பள்ளேதன்ன தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் கைதிகளின் சீருடைகள் தொடர்பாக பரவி வரும் கருத்துகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்





