தங்கையை மாங்காய் தின்னவைத்த கணவனுக்கு கும்பிடக் கும்பிட கும்பாபிஷேகம் செய்த மனைவி!
மனைவியின் தங்கையை காதலித்து கர்ப்பிணி ஆக்கிய நபர் ஒருவர் மனைவியால் கும்பாபிஷேகம் செய்து அனுப்பப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் மட்டக்களப்பிலுள்ள நகர்ப்பகுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த நபரை பொலிஸாரிடம் ஒப்டைப்பதற்கான நடவடிக்கையில் பிரதேச மக்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த ஆண்டு குறித்த பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருகோணமலையைச் சேர்ந்த நபர் ஒருவர் முகநூல் வழியாக காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார்.
பின்னர் மனைவியின் வீட்டிலேயே கடந்த சில மாதங்களாக தங்கியிருந்த நிலையில் மனைவியின் கடைசித் தங்கையான 21 வயதுடைய பெண்ணையும் தனது காதல் வலைக்குள் வீழ்த்தியுள்ளார்.
நேற்று முந்தினம் வீட்டின் பின்னால் குறித்த பெண்ணுடன் சம்மந்தப்பட்ட நபர் இரகசியமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார். அதன்போது அவரது நிழல் அசைவதைக்கண்டு மெதுவாக சென்ற மனைவி நடப்பவற்றை அவதானித்துள்ளார்.
அவர்களின் நடத்தையில் சந்தேகமுற்ற மனைவி தனது தங்கையைப் பிடித்து விசாரித்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அவரிடம் இதுகுறித்து மேலும் விசாரித்தபோது தனது அத்தானின் செயலை அம்பலப்படுத்தியுள்ளார். சம்பவ நேரத்தில் குறித்த நபரும் திருதிருவென்று முழித்து வசமாக சிக்கியுள்ளார்.
குறித்த நபரின் மனைவி மற்றும் மைத்துனர் உட்பட பலரும் குறித்த நபரை விசாரித்தபோது, தான் மனைவியின் தங்கையை உயிருக்குயிராக காதலிப்பதாகவும் அவளைத்தான் திருமணம் செய்யப்போவதாகவும் நடந்த தவறை மன்னித்து தம்மை சேர்த்துவைக்குமாறும் உண்மையைக் கக்கியுள்ளார்.
இதனையடுத்து ஆத்திரமுற்ற மனைவி தனது சகோதரருடன் இணைந்து குறித்த நபருக்கு கும்பிடக் கும்பிட கும்பாபிஷேகம் செய்துள்ளார்.
கும்பாபிஷேகத்தின் தீவிரம் தாங்கமுடியாத குறித்த நபர் குய்யோ முறையோ என்று கூச்சலிட்டு பிரதட்டை போட்டு தலைதெறிக்க ஓட்டமெடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த நபரால் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு அவர் வேண்டாம் என்று கூறியுள்ள நிலையில் அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

