புதினங்களின் சங்கமம்

புலிகளுக்கு எதிராக யாழில் ஆவா குழு ஆர்ப்பாட்டம்!! (Photos)

யுத்தத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு பரிகாரம் தேடி தமிழனமே ஒரே குரலில் ஐ.நா
மனித உரிமைகள் பேரவையில் நீதி கேட்டுள்ள நிலையில், படைத்தரப்பின் ஏற்பாட்டில் யாழ் நகரில்
இன்று சிலர் கோசமெழுப்பினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் தமிழ் பேச முடியாமலிருந்ததாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் ரௌடிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

ஐ.நா மனித உரிமைகள் விவகாரத்தில் தமிழ் கட்சிகள் பக்கசார்பாக செயற்பட்டு வருவதாகவும்,
ஜெனிவாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்
கொலை விடயங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அந்த கும்பல்
கூக்குரலிட்டது.

முன்னள் ஆவா குழு ரௌடியென தன்னை அடையாளப்படுத்தி, கடந்த தேர்தலில் அங்கஜன் தரப்புடன் தேர்தலில்
போட்டியிட்ட ஒருவர் இந்த நடவடிக்கையில் முன்னிலை வகித்தார்.

Image may contain: one or more people and people standingImage may contain: one or more people, people standing and outdoor

அருன்சித்தார்த் எனும் பெயருடைய இவன் கஞ்சா கடத்தல் வழக்கில் பல ஆண்டுகள்  சிறைக்குள் இருந்துள்ளான். அத்துடன் இவனே ஆவா குழு தலைவன் என தன்னைத்தானே கூறுகின்றான்.

Image may contain: 2 people, people standingImage may contain: 3 people, people standing