புதினங்களின் சங்கமம்

யாழ் இந்து ஆரம்பபாடசாலையில் இரு குழுக்களுக்கிடையில் முறுகல்!! பெற்றோர் கவலையில்!!

யாழ் இந்து ஆரம்பபாடசாலையில் கடந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றால் பாடசாலைச் சமூகம் இரு குழுக்களாக பிரிந்து முரண்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த கௌரவிப்பு நிகழ்வை தனியார் மண்டபம் ஒன்றில் நடாத்துவதற்கு பாடசாலைத் தரப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலரும் சில பெற்றோரும் தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளதாகவும் பிள்ளைகளின் கௌரவிப்பை பாடசாலையில் நடாத்த வேண்டும் என பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் முடிவு செய்திருப்பதாகவும் இதனால் அங்கு முறுகல் நிலை தோன்றியுள்ளதாகவும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். இதே வேளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிப்பதை நிறுத்த வேண்டும் என ஏற்கனவே கல்வி அமைச்சு எல்லாப்பாடசாலைகளுக்கும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.