புதினங்களின் சங்கமம்

பாடசாலை மாணவியுடன் சல்லாபம் செய்வதற்காக இரவில் பெற்றோருக்கு நித்திரை குளிசை!!

15 வயதான பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபர் அத்துருகிரிய பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அத்தோடு குறித்த சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணிண் ஆபாச காணொளியை வைத்து 02 வருடங்களாக தன்னுடன் உறவுகொள்ளுமாறு துன்புறுத்தியுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளைில் இருந்து தெரியவந்துள்ளது.

ஒரு நாள் மேற்குறிப்பிடப்பட்ட பெண் கருவுறுதலை தடுக்கும் மருந்தினை அருந்துவதனை அறிந்துக்கொண்ட தந்தை இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்த பொழுது இது தொடர்பிலான உண்மை தகவல்களை அறிந்து கொண்டுள்ளார்.

இதன்பின்னர்,பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சந்தேக நபரையும் தனது மகளையும் வன்மையாக கண்டித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இருப்பினும், சந்தேக நபர் மற்றுமொரு நாளில் பாதிக்கப்பட்ட பெண்ணிண் தந்தை மற்றும் தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைகளுக்காக களுபோவிலை பொது மமருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.